பாராளுமன்றம் இன்று (24) மீண்டும் கூடவுள்ளது.
இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையான நேரம், நிலையியற் கட்டளைகள் 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்கள் 1 முதல் 6 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடை தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, நீதியமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று விவாதிக்கப்படவிருந்த தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணைகள் எதிர்காலத்தில் விவாதிக்கப்படும்.