கொழும்பில் இருந்து காங்கேசன்துறை வரை இயங்கும் நகரங்களுக்கிடையிலான விரைவு ரயிலை வாரத்தில் நான்கு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த புகையிரத நிர்வாகம் முன்னெடுத்த தீர்மானத்தை மாற்றி இன்று (14) முதல் வழமை போன்று இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மின் பெட்டிகள் பற்றாக்குறையை காரணம் காட்டி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ரயிலின் இயக்கத்தை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முன்பு முடிவு செய்தது.
இந்த தடைகளினால் வடக்கு புகையிரத பாதையை பயன்படுத்தும் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடும் என புகையிரத தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், இதனை கருத்திற்கொண்டு முன்னர் இரத்து செய்யப்பட்ட புகையிரதத்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்