ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தீபா எதிரிசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அதற்கமைய, ஒரு வருடத்தின் பின்னர் பதவியை இராஜினாமா செய்வதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், எதிர்காலத்தில் கொழும்பு மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய உறுப்பினர் ஒருவரை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்குரிய பெயர் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட உள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்