பேருந்துகள் உட்பட பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்கும் அனைத்து வாகனங்களிலும் தரம் மற்றும் நிபந்தனை பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன குறிப்பிட்டார்.
நாட்டில் பொதுப் போக்குவரத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களுக்கு சாரதிகளின் கவனயீனம் மற்றும் வாகனங்களில் உள்ள பல்வேறு இயந்திரக் குறைபாடுகளே முதன்மையான காரணங்கள் என அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி பஸ்கள் உட்பட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களின் நிலைமையை ஆய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனைகளுக்குத் தகுதியான தொழில்நுட்ப உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, செப்டெம்பர் மாத இறுதிக்குள் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும் எனவும் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்தார்.