கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத சேவைகள் இன்று (24) மீள ஆரம்பிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு ஏற்பட்ட தித்வா சூறாவளியின் காரணமாக ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, பாதை முழுமையாக சரிசெய்யப்படும் வரை இந்த பாதையில் ரயில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், புகையிரதப் பாதை தற்போது முற்றாகச் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னாருக்கும் இடையில் இன்று (24) முதல் தினமும் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (24) பிற்பகல் 3.50 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து தலைமன்னார் நோக்கிப் புறப்படும் இந்த ரயில், தலைமன்னாரிலிருந்து நாளை (25) அதிகாலை 4:10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.