யட்டியந்தோட்டை கபுலுமுல்ல பத்தினி தேவாலய பெரஹெரவை முன்னிட்டு ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்! யட்டியந்தோட்டை கபுலுமுல்ல பத்தினி தேவாலய பெரஹெரவை முன்னிட்டு ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்! - Theevukaran News யட்டியந்தோட்டை கபுலுமுல்ல பத்தினி தேவாலய பெரஹெரவை முன்னிட்டு ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்! யட்டியந்தோட்டை கபுலுமுல்ல பத்தினி தேவாலய பெரஹெரவை முன்னிட்டு ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்!
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

யட்டியந்தோட்டை கபுலுமுல்ல பத்தினி தேவாலய பெரஹெரவை முன்னிட்டு ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் விசேட போக்குவரத்து திட்டம்!

Adjust the font size:     

யட்டியந்தோட்டை, கபுலும்முல்ல ரஜமஹா பத்தினி தேவாலயத்தில் வருடாந்த எசல மகா பெரஹெரா நடைபெறுவதை முன்னிட்டு இன்று (11) இரவு வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த ஊர்வலம் இன்று (11) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் அதிகாலை 1.00 மணி வரை வீதிகளை வலம் வரும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஊர்வலம் கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி தேவாலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஹட்டன் கொழும்பு வீதியில் கரவனெல்ல சந்தி வரை சென்று அங்கிருந்து கேகாலை அவிசாவளை வீதியூடாக ருவன்வெல்ல வண்டல விகாரையை வந்தடைந்து மீண்டும் தேவாலயத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தின் போது ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியை கரவனெல்ல தொடக்கம் நாவடா சந்தி வரையான சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post