இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது - Theevukaran News இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து இன்று இரவு மட்டுப்படுத்தப்படவுள்ளது

Adjust the font size:     

இரத்தினபுரி - எம்பிலிபிட்டிய பிரதான வீதியின் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அதன்படி, கஹவத்த புராண விகாரையின் வருடாந்த மிஹிந்து மகா பெரஹெர இன்று (03) இரவு இடம்பெறவுள்ளதால் இந்த போக்குவரத்து தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஊர்வலமானது இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் இரவு 8.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரை பயணித்து லிஹினிய சந்தியில் திரும்பி கொட்டகெத்தன வீதி ஊடாக கஹவத்த புராண விகாரைக்கு திரும்பும்.

அவ்வேளையில் இலகுரக வாகனங்கள் மட்டுமே வீதியின் ஒரு வழிப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post