அர்ச்சுனாவின் எம்பி பதவிக்கு எதிரான மனுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு அர்ச்சுனாவின் எம்பி பதவிக்கு எதிரான மனுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு - Theevukaran News அர்ச்சுனாவின் எம்பி பதவிக்கு எதிரான மனுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு அர்ச்சுனாவின் எம்பி பதவிக்கு எதிரான மனுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

அர்ச்சுனாவின் எம்பி பதவிக்கு எதிரான மனுவை ஆகஸ்ட் 31ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவு

Adjust the font size:     

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, அபிநவ நிவாஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹேன் கோபல்லவ முன்னிலையில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது, ​​மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்து, இந்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரியதோடு, அர்ச்சுனா எம்.பி சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் போது ஏற்கனவே அரசாங்க வைத்தியராக பணியாற்றியதாகவும், அரசியலமைப்பின் பிரகாரம் அரச ஊழியர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post