கொழும்பு மாநகர சபையில் 2010 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க இன்று (17) ஆஜராகியுள்ளார்.
கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற ஊழல்கள் காரணமாக அரசாங்க சொத்துக்கள் மற்றும் வருமானங்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற பல முறைகேடுகள் தொடர்பில் ரோசி சேனாநாயக்கவிடம் இங்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்