கடந்த வருடத்தில் 73,455 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 50 ஆக அதிகரித்துள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் (16) மாத்திரம் 1,025 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த நோயாளர்களின் எண்ணிக்கையில், மேல் மாகாணத்தில் இருந்து அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நோயாளிகளின் எண்ணிக்கை 38,700 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் 15,341 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில் அதிகளவான நோயாளர்கள் ஜூன் மாதத்தில் பதிவாகியுள்ளதாகவும், 21,538 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்