நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் எதிர்காலத்தில் அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் எதிராக மேற்கொள்ளப்படும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு எண்ணெய் சேர்க்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி., இந்த பிரச்சினைகளுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி தம்மை ஒழுங்கமைக்கும் விதம் போதாது என குறிப்பிட்டார்.
நாடு பூராகவும் கூட்டங்கள், கருத்தரங்குகள், ஊடகவியலாளர் மாநாடுகளை நடாத்தி கூட்டு எதிரணி குறிப்பிட்ட அளவிலான பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, அதனையும் தாண்டி பிரதான எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் பிரதான எதிர்க்கட்சியின் மௌனமே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்