ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு

Adjust the font size:     

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் சிறைக்காவலர்கள், சிறைச்சாலைகள் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

சிறைச்சாலை அமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தப்பட்டதுடன், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார். ஜனாதிபதி ஒருவரிடம் தமது பிரச்சினைகளை நேரடியாக முன்வைக்கும் சந்தர்ப்பம் தமக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவென தெரிவித்த சிறைச்சாலை அதிகாரிகள், இதற்காக ஜனாதிபதிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post