நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது

Adjust the font size:     

நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் தனக்குரிய அனைத்து பொறுப்புக்களையும் புறக்கணித்துள்ளதாக அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கொல்லப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் அமைச்சர் நிறைவேற்றத் தவறியதன் காரணமாகவே அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

நீதி அமைச்சருக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த 10ஆம் திகதி கையொப்பமிட்டனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post