எதிர்க்கட்சிகள் வெவ்வேறு பெயர்களில் தனித்தனியாக ஊடகவியலாளர் மாநாடுகளை நடத்துவது குறித்தும், பிரிவினை குறித்தும் தன்னிடம் அல்ல, எதிர்க்கட்சித் தலைவரிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு 159 உறுப்பினர்களின் அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், இவ்வாறான எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடுவதனால் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து முன்னோக்கிச் செல்வது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை எனவும், அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாததால் மேலும் பல குழுக்கள் உடைந்துவிடுமா என்பது தனக்குத் தெரியாது எனவும், இது எதிர்க்கட்சியே தீர்க்க வேண்டிய பிரச்சினை எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்