மோதல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்று கொல்லப்பட்டது இதுவே முதல் தடவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த மோதலில் ஈடுபட்டுள்ள சிறைக்கைதிகள் மற்றும் அதிகாரிகளின் வலியை தாம் உணர்வதாகவும், அந்த வலியில் அரசியலில் ஈடுபட தாம் தயாரில்லை எனவும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், தேவையான நேரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படாமை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள இரகசியம் உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றும், வெறுப்பு, பொறாமை, கபடம், கோபம் போன்றவற்றை தொடர்ந்து பரப்பும் அரசியல் சக்தி நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் கூறினார்.
வெறுப்பு, பொறாமை மற்றும் பாசாங்குத்தனத்தை விதைத்த அரசாங்கத்திற்கு இயற்கையானது சரியான முடிவையே மீண்டும் வழங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்