இளம் பருவத்தினரிடையே பால்வினை நோய்கள் பரவும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, கடந்த வருடங்களை விட பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பால்வினை நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுப்பதற்கு பிரதமர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரை இணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்