மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாணத்திலும் ஓரளவு மழை பெய்யும் அதேவேளை, தீவின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்