இரண்டு ரஷ்ய நிறுவனங்கள் நாட்டிற்கு எரிபொருள் விநியோக நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான டெண்டர்களுக்கான விலைகளை சமர்பிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் வரும் 21ம் தேதி திறக்கப்படும் என்றும், இந்த இரண்டு ரஷ்ய நிறுவனங்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு கிட்டத்தட்ட 15 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்