அனுராதபுரம் பகுதியில் சிசுசேரிய பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

Adjust the font size:     

அனுராதபுரம் மிஹிந்துபுர பகுதியில் இன்று (15) காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி, விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு செரிய” பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பயணித்துள்ளனர்.

இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துக்கான காரணம் தொடர்பில் அனுராதபுரம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post