ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக சாட்சியங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இடம்பெற்றது.இதன் போது இரண்டு அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
2014ஆம் ஆண்டு லங்கா உரக் கம்பனியின் கொள்வனவு முகாமையாளராக கடமையாற்றி அதன் களஞ்சிய வளாகத்தின் தரைவிரிப்பு பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த போது நிறுவனத்திற்கு நன்மை பயக்கும் வகையில் செயற்பட்டு ஊழல் குற்றத்தை செய்ததாக முன்னாள் அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்