வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Adjust the font size:     

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து வரி ஏய்ப்பு செய்தமைக்காக மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

வரி செலுத்த தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து வரி அறவிடுமாறு கோரி, அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

#rights #stated #evaded #informs #court #payments #appeared #against #general #seeking
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post