மரதன்கடவளையில் லொறியுடன் பயணிகள் பஸ் மோதியதில் விபத்து

Adjust the font size:     

யாழ்ப்பாணம் - கண்டி (ஏ9) பிரதான வீதியின் மரதன்கடவல மிடிவத்தை பகுதியில் சொகுசு பயணிகள் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சொகுசு பயணிகள் பேரூந்து, முன்னால் வீதியின் வலது பக்கம் திரும்பிய லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ்ஸின் சாரதி படுகாயமடைந்து கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மரதன்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#collides #driver #incident #vavuniya #following #injuries #luxury #treatment #kandy #accident
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post