ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமான எதிர்கால தலைமுறையை கட்டியெழுப்ப வலுவான விளையாட்டு கலாச்சாரம் நாட்டிற்கு அவசியம் - ஜனாதிபதி

Adjust the font size:     

அன்றாட வாழ்வில் விளையாட்டை கலாசாரத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பக்கம் திரும்புதல் போன்ற தற்போதைய சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இது சிறந்த தீர்வாக அமையும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டுக்கான இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளை ஆராய்வதற்காக நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

விளையாட்டை வெறும் போட்டியாக மாற்றாமல் அன்றாட வாழ்க்கையுடன் பிணைந்த ஒரு செயற்பாடாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி, விளையாட்டுப் போட்டிகள் விளையாட்டு வீரர்கள் வெற்றிகளைப் பெறுவதற்கு மட்டுமன்றி, முழு சமூகத்திலும் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

அதற்கான அறிவிப்பு கீழே உள்ளது.

#change #review #generation #thereby #rather #projects #implemented #these #budget #serve
How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post