டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,174 ஆக பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் முதல் 9 நாட்களில் மாத்திரம் 10,685 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், நேற்று (10) மாத்திரம் சுமார் 1,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்