முன்னைய உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த வருடம் 92,043 விண்ணப்பங்கள் பல்கலைக்கழகங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து இந்த வருடம் 42,937 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த லியனகே தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல புதிய பட்டப்படிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்