அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் தலைவர் சுரேஷ் சல்லே தாக்கல் செய்த ரிட் மனு தொடர்பான மேலதிக விசாரணையை ஜூலை 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை இந்த மனுவில் சவால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன இன்று மேலதிக சமர்ப்பணங்களை முன்வைத்ததையடுத்து, மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் 21ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்