முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 07 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள்

Adjust the font size:     

முத்துராஜவெல பிரதேசத்தில் மேலும் 07 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, பெற்றோலிய விநியோகம் மற்றும் சேமிப்பு உட்கட்டமைப்பு விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் இந்த எண்ணெய் தாங்கிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அவற்றில் 04 தாங்கிகள் விமான எரிபொருளை சேமிப்பதற்காக நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்தார்.

மேலும், முத்துராஜவெலயில் இருந்து கட்டுநாயக்கவிற்கு எரிபொருளைக் கொண்டு செல்வதற்கு 21 கிலோமீற்றர் நீளமான குழாயும், கொழும்பு துறைமுக வளாகத்தில் இருந்து கொலன்னாவைக்கு எண்ணெய் கொண்டு செல்வதற்கு நவீன குழாயும் அமைக்கப்படும் என தலைவர் மேலும் தெரிவித்தார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்

How do you feel about this news?
Advertisement
Previous Post Next Post