16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடக பாவனையை தடை செய்யும் அல்லது கட்டுப்படுத்தும் நோக்கில் முன்மொழிவுகளை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் பூர்வாங்க கலந்துரையாடல்களை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய போக்குகளுடன் சமூக ஊடகங்களின் சமூக, உளவியல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து இந்த கலந்துரையாடல்கள் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.
16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்வது தொடர்பான தேசிய வழிகாட்டுதல்களை உருவாக்குவது தற்போது நடந்து வருவதாகவும், குழந்தைகளின் மன மற்றும் உடல் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கையடக்கத் தொலைபேசி பாவனையிலிருந்து 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆரம்பித்துள்ளதாகவும், இது ஏற்கனவே சாதகமான பலனைக் காட்டுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்