SL vs WI முதல் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது SL vs WI முதல் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது - Theevukaran News SL vs WI முதல் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது SL vs WI முதல் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

SL vs WI முதல் டெஸ்ட்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது

Adjust the font size:     

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

அதன்படி, நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட அழைக்க, இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 54 ஓட்டங்களையும், சோனல் தினுஷா 43 ஓட்டங்களையும், அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 120 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஷமர் ஜோசப், அல்ஸாரி ஜோசப், கெமர் ரோச் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, ஒரு விக்கெட்டையும் இழக்காமல், ஒரு ஓட்டம் கூட எடுக்காமல் முதல் நாள் ஆட்டத்தை நிறைவு செய்தது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post