டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது - Theevukaran News டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது

Adjust the font size:     

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 49,000 ஐ அண்மித்துள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, IDH (அங்கொட தொற்று நோய்கள் நிறுவகம்), கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில மற்றும் கம்பஹா உட்பட பல பிரதான வைத்தியசாலைகள் நோயாளர்களின் துரித அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டு எல்லைக்கு அப்பால் சென்று நாட்டில் டெங்கு ஒரு 'அதிக தொற்றுநோய்' நிலைமையாக உருவாகும் அபாயம் உள்ளதாக சங்கம் மேலும் தெரிவிக்கிறது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post