சிறைச்சாலைகளை நிரப்பும் போட்டியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியில் இருந்த போதிலும், தற்போது அந்த வரிசையில் சமகி ஜன பலவேகய கட்சியும் இணைந்துள்ளதாக பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (25) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது கைது செய்யப்பட்ட தனது கட்சி உறுப்பினர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என சுட்டிக்காட்டினார்.
சில தினங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் தன்னிடம் சிறந்த அணி இருப்பதாக கூறியிருந்த நிலையில், சரித் அபேசிங்க போன்ற இன்னும் எத்தனை பேர் உண்மையில் அந்த வரிசையில் உள்ளனர் என்பது தற்போது பாரதூரமான கேள்வியை எழுப்புவதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்