சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மின்சக்தி அமைச்சு, கிராமிய அபிவிருத்தி அமைச்சு, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளை சந்திக்கவுள்ளது.
இதன்படி, நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் 07 ஆவது மீளாய்வுக்கு முன்னதாக நடத்தப்பட்ட கலந்துரையாடல் இதுவாகும் எனவும், நாட்டில் தங்கியிருக்கும் போது நாட்டின் அண்மைய பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வில் ஈடுபடவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்