பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (23) உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி வணக்கத்திற்குரிய ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
வணக்கத்திற்குரிய ஞானசார தேரர் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறி அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்