யாழ்ப்பாணம் கிரிக்கெட் மைதானத் திட்டத்தை நிறைவு செய்வதற்கான நிதி பலம் தற்போது தமக்கு இல்லை என இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழு தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த குழுவின் செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், தற்போது இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், திட்டத்தின் இறுதி நோக்கம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் குறித்த தனது மீளாய்வு அடிப்படையில், அது இலங்கை கிரிக்கெட்டின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதனை நிறைவு செய்வதற்கான தற்போதைய நிதி பலம் அதற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் மண்டைதீவு தீவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகள் 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்