மேலும் 07 BESS அமைப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன மேலும் 07 BESS அமைப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன - Theevukaran News மேலும் 07 BESS அமைப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன மேலும் 07 BESS அமைப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

மேலும் 07 BESS அமைப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன

Adjust the font size:     

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பது மற்றும் நுகர்வோருக்கு நம்பகமான மின்சார விநியோகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் (BESS) திட்டத்தின் கீழ் மேலும் ஏழு அமைப்புகள் நேற்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

பாணந்துறை, பெலியத்த, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுனியா, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய இடங்களில் அமைந்துள்ள மின்சார விநியோக உப நிலையங்களுக்கு அருகில் இந்த அமைப்புகள் நிறுவப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த 07 அமைப்புகளும் 280MWh ஆற்றல் சேமிப்புத் திறனைக் கொண்டிருப்பதுடன் தேசிய மின் கட்டத்திற்கு 70MW மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஜூன் மாத தொடக்கத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 08 அமைப்புகள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன, மேலும் ஜூலை மாத இறுதிக்குள் 80 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டத்திற்கு சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post