கொழும்பு உயர்மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினியின் பகிரங்க கருத்துக்கள் ஈஸ்டர் ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறதா அல்லது தாக்குதல் நடத்தியவர்களுடன் நிற்கிறதா என்ற நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தந்தை சிறில் காமினியிடம் பத்து கேள்விகளை முன்வைப்பதாகவும், அவற்றுக்கு பதிலளிக்குமாறும் பொதுமக்களின் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய உதவுமாறும் கோரியதாகவும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்