தமது தொழில் சம்பந்தமான முறையான பொறிமுறையையோ அல்லது முடிவையோ அரசாங்கம் அறிவிக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாதேல் (கடற்கரை) மீனவர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இன்றும் நாளையும் தொடர்ந்து குறித்த இடத்தை ஆக்கிரமித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை மாதேல் சங்கம் தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்குள் வெற்றிகரமான தீர்வு வழங்கப்படாவிட்டால், 2,000 க்கும் மேற்பட்ட மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
ஆர்.ஏ. தில்ருக்
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்