நாடாளுமன்றம் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - Theevukaran News நாடாளுமன்றம் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

Adjust the font size:     

பாராளுமன்றம் இன்று (24) மீண்டும் கூடவுள்ளது.

இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நிலையியற் கட்டளைகள் 22, பத்திகள் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின், தேசிய சுற்றாடல் (திருத்தம்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் காலை 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post