ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர போன்றவர்கள் எதிர்க்கட்சிக்கு எதிரிகள் என ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதிலும் எதிர்கட்சியினர் அவர்கள் மீது பகைமை கொண்டிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (26) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஜே.வி.பி அரசியலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை அரசாங்கம் கொண்டு வந்து பொலிஸ் சேவையில் உயர் பதவிகளுக்கு நியமித்துள்ளது தவறான நடவடிக்கை எனவும் அதனையே எதிர்க்கட்சி எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சபாநாயகரின் சட்ட விரோதமான நடவடிக்கைக்கு எதிராகவே அன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக விளக்கமளித்த அவர், தாம் பாராளுமன்ற கதாயுதத்துடன் ஓட முற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தமது எதிர்ப்பை பதிவு செய்வதற்காக சபையின் கிணற்றுக்குள் பிரவேசித்த போதிலும், தனக்கு எந்தவிதமான சேதமோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் பாராளுமன்றத்தின் மீது குண்டுகளை வீசுவதற்கு நடவடிக்கை எடுத்த ஜே.வி.பியின் உறுப்பினர்கள் இன்று சபைக்கு வந்து அண்மைய சம்பவத்தை "நாகரீகமற்ற செயல்" என்று முத்திரை குத்தியுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்