சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (26) இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தேசிய பிரச்சார ரதம ஏகதாவின் கீழ் நாடு பூராகவும் அணிவகுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி கொழும்பு சைத்திய வீதியில் இருந்து கொள்ளுப்பிட்டி சந்தி வரை இந்த விசேட விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இது இடம்பெற்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்