சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வர முயன்ற 625 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான களனி கடற்படை கப்பல் மூலம் நீர்கொழும்பு குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இந்த டிங்கி படகு கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த கப்பலில் 17 பைகளில் இந்த பீடி இலைகள் காணப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீர்கொழும்பு, பமுனுகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபர், டிங்கி படகு மற்றும் பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்