கேகாலை, மொலகொட, மங்களகம பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று மேலும் பல வாகனங்களுடன் மோதியதில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (22) இடம்பெற்ற இந்த விபத்தில் பஸ்ஸுடன் சுமார் 07 வாகனங்கள் மோதியுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த 10 பேர் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று எதிர்திசையில் வந்த பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்