விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது - Theevukaran News விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளது

Adjust the font size:     

விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை இன்று (24) முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, 'தூய்மையான ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இப்பிரச்சினைக்கு இத்தருணத்தில் வழங்கக்கூடிய சிறந்த தீர்வாக மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க மக்களை ஊக்குவிப்பதும் ஆகும் என குறிப்பிட்டார்.

ஊடக நிறுவனங்களுடனான சந்திப்பில் பங்கேற்ற அவர், அடுத்த சில நாட்களில் பொதுமக்களுக்கு தொடர்ந்து கல்வி கற்பிப்பதற்கும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க அவர்களை ஊக்கப்படுத்துவதற்கும் அவர்களின் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post