நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு நாளை (01) முதல் சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளது.
இதுவரை கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 28 என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற சகல நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உச்ச நீதிமன்ற நீதியரசர் கிஹான் குலதுங்க தலைமையிலான முழுமையான ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்