காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் - Theevukaran News காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர் காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

காணாமல் போன யுவதியை தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்

Adjust the font size:     

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 19 வயது யுவதி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அடம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, அவரைக் கண்டறிவதற்கு பொதுமக்கள் உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த யுவதியின் தாயார் கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி தனது மகள் காணாமல் போயுள்ளதாக அடம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஹாலி எல, ஹெல மொரேதொட்ட பகுதியைச் சேர்ந்த 'ரத்நாயக்க முதியன்செலாகே காவிந்த்யா பவானி' என்ற 19 வயதுடைய யுவதியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புகைப்படத்தில் உள்ள யுவதி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அடம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0718 591528 அல்லது அடம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் 055 2294965 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post