நாடாளுமன்றம் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது - Theevukaran News நாடாளுமன்றம் இன்று கூடுகிறது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

Adjust the font size:     

பாராளுமன்றம் இன்று (26) மீண்டும் கூடவுள்ளது.

இதன்படி, இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன், நிலையியற் கட்டளைகள் 22, பத்திகள் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற அலுவல்களுக்காக காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல பதில் தேவைப்படும் கேள்விகளுக்கும், முற்பகல் 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளைகள் 27(2) இன் கீழ் வினாக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் 2478/41 என்ற அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவு முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையில் அங்கீகாரத்திற்காக விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளது.

அதனையடுத்து, நேற்று (25) அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் போராட்டம் தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை பிற்பகல் 2.00 மணி முதல் மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மாலை 5.30 மணி வரை

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post