டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது - Theevukaran News டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது
Update:Welcome to Theevukaran.comVersion 2.1

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது

Adjust the font size:     

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 48,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று (23) மாத்திரம் 750 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 48,287 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

மொத்த நோயாளர்களில் 52.12% மேல் மாகாணத்திலும், 16.04% தென் மாகாணத்திலும், 9.15% சப்ரகமுவ மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு அபாயம் அதிகம் உள்ள 06 மாகாணங்களில் இன்று (24) முதல் 26 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்



Previous Post Next Post