வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 971 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும், ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆக பதிவாகி, ஒரு நிமிட இடைவெளியில் ஏற்பட்டன.
இந்த பூகம்பங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக வெனிசுலாவைத் தாக்கும் வலிமையானவையாகும், மேலும் அவற்றின் விளைவுகள் அப்பகுதி முழுவதும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்