அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 சீ ரேஞ்சர் மல்டி ரோல் ஹெலிகொப்டர்கள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு நேற்று (23) பிற்பகல் ரத்மலானை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இரத்மலானை விமானப்படை தளத்தை வந்தடைந்த ஜனாதிபதியை விமானப்படையினர் பெருமையுடன் வரவேற்றதுடன் ஹெலிகொப்டர்களை பார்வையிட்டு குழுவினருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வில் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பாண்டு எதிரிசிங்க மற்றும் அமெரிக்க பசுபிக் விமானப்படைத் தளபதி ஜெனரல் கெவின் ஷ்னைடர் ஆகியோர் கலந்துகொண்ட இருதரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்த TH-57 'சீ ரேஞ்சர்' விமானங்களின் பல்பணி திறன்கள் காரணமாக, எதிர்காலத்தில் பல துறைகளில் செயல்படுவதற்கு அவை பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்