நாட்டில் நேற்று (22) ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் நேற்று மாத்திரம் 1069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் டொக்டர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
ஒரு நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை என்றும், இதுவரை மொத்தம் 47,179 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
#தீவுகாரன் #இலங்கைசெய்திகள் #செய்திகள்